Friday, 20 February 2015

ஒரு மெல்லிய கோடு.

வல்லிய
மூச்சுக்காற்றின்
உஷ்ணத்தின் எதிரில்
தள்ளிய நுரையின்
குமிழ்கள் ஒவ்வொன்றாய்
உடைந்துவர....
பாம்புக்கும்
தவளைக்கும்
நடுவில் இருந்தது....
ஒரு மெல்லிய கோடு.

Friday, 13 February 2015

247.

அவள் பெயரை
எழுதினாலே
எல்லா எழுத்துகளும்
கள்ளுண்ட
குரங்காகி விடுகிறது.
247 குரங்குகள்.

காதலடி காதல்.

நான் சிந்திய 
காதல் தோல்வியின் 
கடைசி 
கண்ணீர்த் துளியில் 
இன்னொரு 
காதல் விதை 
முளைத்தது.