Thursday, 11 December 2014

சொட்டுநீர் சங்கீதம்.

என்னதான் மழை 
ப்ரவாளமென்றாலும் 
நின்றபிறகான
கூரையிறங்கும்
சொட்டுத்துளி
தாளம்தான்.

நதியோரம்.


நீரோடிய
நதிகளில் இன்று
மண்லாரிகள் 
ஓடுகிறது.
நதி ஓட்டத்தை
நெட்டுக்குத்தாய்
தடுத்து நிறுத்தி
மின்சாரம் எடுத்தோம்.
வறண்ட நதி
ஷாக் தருகிறது.
வீடுகட்டுகிறோம் என்ற
கான்க்ரீட் பீடைகள்
பூமி பூஜையாய்
நீராதாரங்களுக்கு
பாடை கட்டினார்கள்.
ஊருக்காய்...
பேருக்காய்...
நீருக்காய்...
தவளைக் கூச்சலிட்ட
கூட்டத்தைப் பார்த்து
வறண்ட நதி
வறட்டுச் சிரிப்பு
உதிர்த்தது.

விதியோடு விளையாடி....

பகல் 
பாலைக் குடிக்கிறது.
இரவு 
கஷாயம் குடிக்கிறது.
பகல் பாண்டவர்கள்போல்
வெண்ணிற ஆடை உடுத்துகிறது.
இரவு
துரியோதனாதிகள்போல்
கருப்பு ஆடை.
பகல்
அறம் அனுசரிப்போருக்கு.
இரவு
புறம் பிழைப்போருக்கு.
பகலென்ன, இரவென்ன
பசித்தவனுக்கு
இரண்டும் ஒன்று..

அழுத்தும் சோகம்.

கடந்த காலத்தின்
கற்கண்டு முகடுகளையும்
கரடுமுரடுகளையும்
கண்மூடி
தியானிக்கிறேன்.
இடிந்த பொழுதின்
மடிந்த நேரங்களும்
படிந்த சுவடுகளின்
சரிந்த வலிகளும்
மரித்துப் போகாமல்
பாசிகளாய்
படிந்து போனது.
வாழ்வாட்டத்தில்
சுகங்களை அழுத்தி
சோகங்கள்
பச்சைக் குதிரை ஆடுகிறது.

மழைக் காதல்.

மழைக்குள்
நீ வந்தாய்.
மழையாய்
விழி நிறைந்தாய்.
குடையொன்றும் - இல்லை
என்னிடத்தில், காதல்
கொடையாய்
மனம் நிறைந்தாய்.
மழையே நீ வாழி.
காதலே!
மழைபோல் நீ வாழி.

அழகன் முருகன்.

சங்கம்,சக்கரம் தரித்தோனின் மருகன்
சங்கம் வளர் மதுரையானின் மகன் 
தங்கம் நிகர்மேனித் தாயாரின் செல்லன் 
பங்கம் தகர் தணிகையார் முருகன்.

' பித்ரு காயத்ரி '

ப்ரபிதாமகாய வித்மஹே பிதாமகாய தீமஹி!தன்னோ பித்ரு: ப்ரசோதயாத்!
இதை தினமும் சொல்லி வந்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

சோகம் அனுபவி.

ஸுகம் மட்டுமல்ல வலியும் நம் தோழன்தான்.அதை தோழமையோடு அனுபவியுங்கள்.இது ஏன் நமக்கு? என வேண்டாம்.இதுவும் நமக்கே என நினையுங்கள்.பின் வலிகூட ஸுகம் தான்.

ஆட்டம்.

சம்சார வயர்களில்
கணவக் குயில்களின்
கும்மாளம்
ஆடும் வரை ஆட்டம்.

வெண்ணை...

பார்க்கையில்
வெளுப்பாக இருக்கும்.
தடவுகையில்
தளதளப்பாய் இருக்கும்.
மிரளுகையில்
மிராக்குல்தான்.
உருண்டு திரண்டு
வரும்போது
உடைந்தது தாழி.
வெண்ணெய்.

கணபதி.

உடைந்த தந்தம் வியாசருக்கு உதவும்-உன் 
புடைத்த தொந்தி மோதகம் உண்ணும்-என் 
கலைந்த கனவுகள் யாசகம் கேட்கும்-இன்றுன் 
குளிர்ந்த ஆசிகள் காக்கும் நின்று.

வெண்பா அல்ல..என் பா..

சங்கம்,சக்கரம் தரித்தோனின் மருகன்
சங்கம் வளர் மதுரையானின் மகன் 
தங்கம் நிகர்மேனித் தாயாரின் செல்லன் 
பங்கம் தகர் தணிகையார் முருகன்.

அந்த 365?

ஒவ்வொரு கிளைகளாய் 
உதிர்ந்து 
பட்டுப் போன மரமாய் 
நிற்கிறது
அட்டை மட்டும்.
தேதிகள் அழிய
வருடம் வளர்கிறது.
சேதிகள் சொன்னதென்ன?
பூஜ்யங்கள்
பதிலாகிறது.

Wednesday, 10 December 2014

தலை குனியும் தாமரைகள்.

தெருவிலே முத்தம்
ஏதய்யா குத்தம்?
முழங்கிவிட்டு
முத்தெடுத்தால்
கிளம்பிற்றே சத்தம்.
ஒண்ட வீடில்லா
நாய் செய்தால்
பாதகமில்லை.
அண்டை மனிதன்
முகம் சுழிக்கச் செய்தால்
சாதகமில்லை.
கைவிடு அனாச்சாரம்.
தலை நிமிர்த்து
கலாச்சாரம்.

பெறுக..இவ்வையகம்.

அளப்பரிய
அக்ரமங்கள்
தான்செய்து
வழியறியா
வாழ்வுதனைப் 
வரிப்பது
துன்பம்.
அளவறியா
அமைதிக்குள்
உள்போந்து
அகண்டத்தில்
அவதானிப்பதே
இன்பம்.
இன்பமாய் இரு.
துன்பத்தில் துவளாதே.