Sunday, 3 November 2013

வாணீ! வா நீ!

கலைவாணியின் 
கமலப் பாதம் தொட்டு 
வித்தையை
புத்தியில் ஏற்றினேன்.
ப்ரம்ம பத்னியின்
எழுத்தாணி கொண்டு
கவிதையைக்
காகிதத்தில் இறக்கினேன்.
வரம் தரும் வாணியே!
வந்திறங்கு
என் கவிதையில்.

No comments:

Post a Comment